ஜெயலட்சுமி: தந்தையிடம் விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, தம்பி சீனிவாசன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும்விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமி வழக்கு குறித்து சிபிஐ 2 மாதத்தில் விசாரணை நடத்தி, டிசம்பர் 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றுஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, தம்பி சீனிவாசன், பக்கத்து வீட்டுக்காரர் கனகராஜ், வீட்டின் உரிமையாளர்ரங்கராமானுஜம் மற்றும் கோவையைச் சேர்ந்த 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
மதுரை ரயில் நிலைய பார்சல் பிரிவு அலுவலகம் அருகே உள்ள சிபிஐ சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் காலை 10 மணி முதல்மாலை 5 மணி வரை சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் சிவாஜி தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்திஉள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து அழகிரிசாமியின் வழக்கறிஞர், விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் அழகிரிசாமி, சீனிவாசன்ஆகியோர் சில ஆவணங்களை ஒப்படைத்தனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டியதிருக்கும் எனஅதிகாரிகள் கூறினர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் வரும் 1ம் தேதியன்று இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல்செய்யப்படும் என்றும், முழுமையான அறிக்கையை அளிக்க மேலும் அவகாசம் கோரப்படும் என்றும் சிபிஐ வட்டாரம்தெரிவித்தது.












Click it and Unblock the Notifications