வேலூர் சிறையில் ஜெயேந்திரருடன் அத்வானி சந்திப்பு
சென்னை:
வேலூர் சிறையில் சங்கராச்சாரியாரை பா.ஜ.க. தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார்.
முன்னதாக காஞ்சிபுரம் சென்ற அவர் சங்கர மடத்தில் இளையவர் விஜயேந்திரரை சந்தித்துப் பேசினார்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே இன்று அத்வானி நடத்தவிருந்த போராட்டம் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. மாலையில் பொதுக் கூட்டம் மட்டும் நடக்கவுள்ளது.
இன்று காலை சென்னை வந்த அத்வானி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியல் தலைவர்களைக் கைது செய்வதாக இருந்தால் அதற்கென்று நெறிமுறைகள் உள்ளன. இந்த நிலையில், நாடே போற்றும்,சமுதாயத்தில் க்கியத்துவம் வாய்ந்த ஒரு மதத் தலைவரை கைது செய்யும்போது அதை விட கூடுதலாகவே நெறிமுறைகளை நாட்டுமக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. முறையற்ற வகையில் இந்த கைதுமேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை நாடே எதிர்க்கிறது என்றார்.
பின்னர் காஞ்சிபுரம் சென்று சங்கர மடத்தில் 35 நிமிடங்கள் விஜயேந்திரருடன் பேச்சு நடத்திய பின் நிருபர்களிடம் பேசியஅத்வானி, விரைவில் இந்த கைது விவகாரம் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நடந்த சம்பவங்கள் மிகவும்கவலைக்குரியவை. இளையவரிடம் கடந்த இரண்டு நாட்களாகவே ஆழமான ஆலோசனைகள் நடத்தி வந்தேன் என்றார்.
பின்னர் அத்வானி வேலூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை அத்வானி சந்தித்தார்.இருவரும் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
முன்னதாக இன்று அத்வானி தலைமையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே தர்ணா நடக்கும் என்று நம்பிஅங்கு வந்த பா.ஜ.கவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தப் போராட்டத்தை பாஜக திடீனெ ரத்து செய்துவிட்டது.
அதற்குப் பதிலாக இன்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் கண்டன பொதுக் கூட்டம் மட்டும் நடைபெறுகிறது. இதில்அத்வானி, முன்னாள் பாஜக தலைவர் வெங்கைய நாயுடு, பாஜக செயலாளர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications