ஜெயேந்திரர் கைது: அணுமின் நிலையத்துக்கு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கல்பாக்கம்:
ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்என்று சில மத அமைப்புகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரி பாஜக, வி.ஹெச்.பி.ஆகியவை போராட்டம் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை குண்டு வைத்துதகர்ப்போம் என்று சில இந்து அமைப்புகளின் பெயரில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர்பல்தேவ்ராஜ்க்கு மிரட்டல் கடிதத்தை சிலர் அனுப்பியுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை பல்தேவ்ராஜ் பேக்ஸ் மூலம் எஸ்.பிக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.இதனையடுத்து கல்பாக்கம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications