திமுக எதிரி: அதிமுக நம்பிக்கை துரோகி- பாஜக
சென்னை:
திமுக எங்கள் எதிரி, அதிமுக நம்பிக்கை துரோகி என்று பாஜகவின் தமிழ் மாநில செயலாளர் எச்.ராஜா கூறினார்.
சங்கராச்சாரியார் கைது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் கூறியதாவது:
பாஜகவின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன்:
ஜெயேந்திரர் கைது இந்துத்துவா மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது பாஜகவின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அரசியல்ஆதாயங்களுக்கா கொள்கையை விட்டுத் தர முடியாது. அதற்காகத் தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
தமிழகத்தில் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது குறித்து கவலைப்படவில்லை. இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. ராமர்கோயில் விவகாரத்திலும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். தமிழ்நாட்டில் எங்கள் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துதுள்ளது.
சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சே இப்போது எழவில்லை.
பாஜக பொதுச் செயலாளர் குமாரவேல்:
எந்த ஒரு தலைவரையும் கைது செய்தால் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் கோரிக்கை வைப்பார்கள்.
ஆனால் இந்த வழக்கில் ஜெயேந்திரரை விடுதலை செய்யாதீர்கள் என்று அரசியல் கட்சிகள் சொல்கின்றன. அவரை விடுதலைசெய்யக் கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?
எச்.ராஜா:
ஜெயேந்திரர் அப்பாவி; இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டதாகும் என்பதை விளக்கஎங்களுக்கு உரிமை உண்டு. தமிழகத்தில் திமுக எங்களது எதிரி. அதிமுக நம்பிக்கைத் துரோகி என்றார்.












Click it and Unblock the Notifications