ஜெயலட்சுமி: போலீசிடம் சிபிஐ விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த 6 போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம், ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி, தம்பிசீனிவாசன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரிடம் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
நேற்று ஜெயலட்சுமியின் தாய் திருவேங்கடத்தாய், குழந்தைகள் கோகுல், அபிநயா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் போலீசாரிடம் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இன்று நெல்லைச் சேர்ந்த 6 போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடந்தது. நெல்லை போலீஸார் ஜெயலட்சுமிமீது விபச்சார வழக்கு தொடர்ந்து இருந்தது குறித்தும், டி.எஸ்.பி ராஜசேகருக்கும், ஜெயலட்சுமிக்கும் இருந்த தொடர்பு குறித்தும்சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications