சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி & காஞ்சிபுரம்:

சங்கராச்சாரியார் மீதான வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும், இதில் சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடக் கோரியும் விஎச்பி தலைமையிலான இந்து அமைப்புகள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதே போல சிபிஐ விசாரணை கோரி பா.ஜ.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கால் மற்றும் விஷ்ணு ஹரி டால்மியா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்து மதத்தலைவர்கள் குழு இன்று கலாமைச் சந்தித்தது. இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. பின்பு நிருபர்களிடம் பேசிய அகாரா பரீஷத்தலைவர் மஹாந்த் யான் தாஸ் கூறியதாவது:

ஜெயேந்திரர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற அதை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் வழக்குவிசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்.

இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு, ஜெயேந்திரரை உடனடியாக விடுவிக்க மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கலாமிடம் கோரிக்கை விடுத்தோம் என்று கூறினார்.

ஜூனா அகாரா அமைப்பைச் சேர்ந்த மகாமண்டலேஸ்வர் அவ்தேஷானந்தா நிருபர்களிடம் பேசுகையில்,

பல நாடுகளில் மதத் தலைவர்களை நடத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இருக்கின்றன என்று கலாமிடம்சுட்டிக் காட்டினோம். இந்து மடங்களை வருமான வரி சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று இடதுசாரிகள் கோரிவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கலாம் உறுதியளித்தார் என்று கூறினார்.

அசோக் சிங்கால் கூறுகையில், ஜெயேந்திரர் விடுதலையாகும் வரை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்தப்போராட்டத்தை ஒழுங்குபடுத்த கூட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்து, இந்துக்களின்உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்று கூறவிருக்கிறேன்.

இந்த விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தை ஆச்சார்யா சபாஒழுங்குபடுத்தும் என்று கூறினார்.

அப்பீல் குறித்து ஜெயேந்திரர் முடிவு:

இதற்கிடையே தனது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனுவைத் தாக்கல் செய்வது குறித்து ஜெயேந்திரர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் தியாகராஜன்தெரிவித்தார்.

ஜெயேந்திரரின் போலீஸ் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்கக் கோரி போலீஸார் தாக்கல் செய்திருந்த மனுவை காஞ்சிபுரம்முதலாவது குற்றவியல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன்,

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஜெயேந்திரர் இன்னும் முடிவு செய்யவில்லை.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

பொது நல வழக்கு:

இந் நிலையில் சங்கராச்சார் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.கவின் ஒரு பொது நல மனுவும்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க. எம்பியான பிபி சிங் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+