• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஜெ- ஜெயேந்திரர் தனிப்பட்ட விரோதம்: கருணாநிதி

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

சங்கரராமன் கொலை செய்யப்பட்டு 2 மாதங்களான பிறகு ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில் ஏதோ ஒரு பின்னணி இருப்பதாகசந்தேகம் எழுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரை இத்தனை நாட்கள் சும்மாவிட்டுவிட்டு இப்போது கைது செய்ததில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட விரோதம் தான்காரணமாகத் தெரிகிறது என்றார்.

இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

சங்கரராமன் கொலை செய்யப்பட்டு இரண்டரை மாதங்களாகிறது. ஆனால், யாரையும் கைது செய்யாமல் அமைதி காத்தது தமிழகஅரசு.

ஆனால் திடீரென்று ஜெயேந்திரரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 2 மாதங்களாக ஜெயேந்திரரை விட்டுவிட்டு இப்போது திடீரென கைது செய்து, வேக வேகமாக விசாரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதில்ஜெயலலிதாவின் தனிப்பட்ட விரோதம் தான் காரணமாகத் தெரிகிறது.

இந்தக் கைதை நான் ஆதரித்தேன். ஆனால், இது தனிப்பட்ட விரோதத்தால் நடத்தப்பட்ட கைது என்று தெரியவரும்போதுஅதைச் சரியென ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே போல கைதுக்குப் பின் சங்கராச்சாரியார் நடத்தப்பட்ட விதம் மிகமோசமானதாகவே படுகிறது. அளவுக்கு மீறி போலீசார் நடந்து கொண்டுள்ளனர்.

இத்தனை நாட்களாக அவரை ஏன் கைது செய்யவில்லை? இடையில் நடந்த பேரம் என்ன?. ஆதாரங்களை கலெக்ட் செய்யகாத்திருந்தோம் என்று போலீசார் கூறலாம். ஆனால், இந்தக் கைதுக்கான காரணம் குறித்து இப்போது எனக்குக் கிடைத்து வரும்தகவல்கள் வேறு மாதிரியாக உள்ளன.

ஜெயலலிதாவுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. இதை நாம்மறந்திடக் கூடாது.

வீரப்பன் கைது குறித்து ஏகத்துக்கும் விளக்கம் தந்த இந்த அரசு ஜெயேந்திரர் கைது விஷயத்தில் முழு விவரத்தைத் தராதது ஏன்.இந்த ஆட்சியில் எத்தனையோ கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அவையெல்லாம் கேட்பாரற்று, விசாரிப்பு இல்லாமல்கிடக்கின்றன.

ஜெயேந்திரர் விஷயத்திலும் முதலில் சும்மா இருந்துவிட்டு அப்புறம் தான் பாய்ந்திருக்கிறார்கள். இதன் பின்னணி மர்மம் என்ன?என்று பல கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கைதில் சோனியா காந்தியை குறை சொல்கிறார்கள் வி.எச்.பியினர். மாநில அரசின் செயல்பாட்டில் மத்திய அரசுதலையிடாது என்று முதலில் வசனம் பேசியவர்கள் இதற்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?.

ஜெயேந்திரர் விஷயத்தில் பா.ஜ.கவினர் தங்கள் கடமையை செய்கிறார்களா. ஆனால், இதில் மதத்தைப் புகுந்தி கலவரம்ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.

கொல்லப்பட்ட சங்கர்ராமன் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி வழங்கியதை வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

தமிழக கோவில் பூஜைகளுக்கு நாள் குறித்ததில் சங்கராச்சாரியார் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜெயலலிதா நினைக்கிறார். தனக்குஉகந்த நாட்களை ஒதுக்கிவிட்டு, வேண்டுமென்ற தனக்கு நாள் சரியில்லாத நேரங்களில் தமிழக கோவில்களில்கும்பாபிஷேகங்கள், பூஜைகள் நடத்த அவர் நாள் குறித்ததாகவும், இதை தனது ஆஸ்தான ஜோதிடர் பணிக்கர் மூலம் அறிந்ததால்தான் சங்கராச்சாரியார் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததாகவும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

மேலும் ஒரு மருத்துவமனை விஷயத்திலும் சக்தி மிக்கவர்களுக்கும் காஞ்சி மடத்துக்கும் இடையே மோதல் நடந்ததாகவும் இதன்காரணமாகவே, சங்கராச்சாரியார் மீதான கொலைக் குற்றச்சாட்டு வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

இந்தத் தகவல்களை வைத்தே இந்தக் கைது குறித்து கருணாநிதி சந்தேகம் எழுப்புவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X