சங்ரரராமன்: மதுரை தொழிலதிபருக்கும் தொடர்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சங்கரராமன் கொலை வழக்கில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரையும் வளைத்துள்ளது போலீஸ்.

சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஜெயேந்திரரிடம் 3 நாட்கள்போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலதிபரின் வீட்டில் கடந்த மாதம் ஜெயேந்திரர் தங்கியுள்ளார்.

அப்போது தான் சங்கரராமன் கொலை வழக்கு தீவிரமடைந்து வருவது குறித்து ஜெயேந்திரருக்கு காஞ்சிபுரத்திலிருந்து தகவல்தரப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவாறே முக்கியப் புள்ளிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெயேந்திரர் போலியான் 5குற்றவாளிகளை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக வைக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு மதுரை தொழிலதிபரும் யோசனை தந்து உதவியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அவரது செல்போன் மூலம்தான்ஜெயேந்திரர், அப்பு உள்ளிட்ட குற்றவாளிகளோடு பேசியதாகவும் கூறப்படுகிறது.

கொலை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த எல்லா விஷயங்களும் இந்தத் தொழிலதிபருக்குத் தெரியும் என்று கருதும் போலீசார்,அவரை தங்கள் கஸ்டடிக்குக் கொண்டு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+