பாஜக போராட்டத்தில் ஆர்.வெங்கட்ராமன் !!
டெல்லி:
சங்கராச்சாரியார் கைதை எதிர்த்து டெல்லியில் இன்றும் 3வது நாளாக பா.ஜ.க. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
மாலையில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமை தாங்கினார். பா.ஜ.க. நடத்திய இந்தப்போராட்டத்தில் மரபுகளை உடைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் பங்கேற்று ஆச்சரியத்தைஏற்படுத்தினார்.
இப் போராட்டத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் பங்கேற்றார்.
கட்சியின் தலைவர் அத்வானி தலைமையில் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் நேற்று முரளிமனோகர் ஜோஷி தலைமையில்நீடித்தது. இன்று முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் உள்பட, சுஷ்மா சுவராஜ், மல்ஹோத்ரா, அலுவாலியா உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டார்.
மாலையில் நடந்த தர்ணாவில் பேசிய வாஜ்பாய், மதத் தலைவர்களை மதிக்கும் அரசு அமையும் வரை பா.ஜ.கவின் போராட்டம்தொடரும் என்றார்..
வழக்கமாக முன்னாள் ஜனாதிபதிகள் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்பது மரபாக இருந்து வருகிறது. அதை ஆர்.வி.ஒதுக்கிவிட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications