செக்ஸ் புகார்: டாக்டர் கோமதி மனநோயாளி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததாக டாக்டர் கோமதி என்பவர்கூறியுள்ள புகாரில் உண்மையில்லை, அவருக்கு மன நிலை சரியில்லை என்று இந்திய டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் கோமதி. இவர், சென்னை போலீஸ் கமிஷ்னர்அலுவலகத்தில் கொடுத்த புகாரில், இடமாற்றம் தொடர்பாக அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அணுகியபோது அவர் என்னைஉடலுறவுக்கு அழைத்தார், அடித்து உதைத்தார் என்று புகார் கூறியிருந்தார்.

திமுக சார்பான சன் டிவியிலும் கோமதியின் பேட்டி விலாவாரியாக காட்டப்பட்டது. இந் நிலையில் கோமதியின் புகாரில்உண்மையில்லை என்று இந்திய மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் பாலசுப்ரமணியம், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சகுந்தலா,ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் உதவிப் பேராசிரியர் ஹெப்சிபா, கஸ்தூரிபாய் (கோஷா) காந்தி மருத்துவமனைகண்காணிப்பாளர் வசந்தா சுப்பையா, டாக்டர்கள் ஜெயபால், ஜெகதீசன் உள்ளிட்டோர் இதுகுறித்து செய்தியாளர்களிடம்கூறியதாவது:

கோமதியின் கணவர் சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார். அந்த விபத்தில் கோமதியும் காயமடைந்து பல நாட்கள்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் அவருக்கு மன நோய் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

அவர் மீது பல புகார்கள் உள்ளன. செல்போன்களைத் திருடியது, சக ஊழியர்கள், டாக்டர்கள் மீது பொய் புகார்கள் கூறுவதுஉள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. அவர் வேலை பார்த்த எந்த இடத்திலும் அவருக்கு நல்ல பெயர் இல்லை.

அமைச்சர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் டாக்டர்கள் சங்கத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. நேராக சன்டிவிக்குத்தான் புகார் அளித்துள்ளார். எனவே இந்தப் புகாரில் உண்மையில்லை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அவரது புகார் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோமதிக்கு மனநலம் சரியில்லை என்று தளவாய்சுந்தரமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+