சாப்ட்வேர் ஏற்றுமதி: தமிழகம் 20% வளர்ச்சி
கோவை:
தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீத்துக்கும் அதிகமாக இருப்பதால், இன்னும் இரண்டாண்டுகளில் சாப்ட்வேர்தொழிலில் நாட்டிலேயே முதலிடத்தை தமிழகம் பிடித்துவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சிஐஐ சார்பில் கோவையில் நடந்த ஐடி தொடர்பான மாநாட்டில் பேசிய சட்டம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்ஜெயக்குமார் கூறியதாவது:
2003-04ம் ஆண்டில் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் துறையில் 20 சதவீத வளர்ச்சியை தமிழகம் எட்டிவிட்டது. இந்த ஆண்டில் ரூ.8,000 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 6,316 கோடியாக இருந்தது.
அடுத்த ஆண்டில் ஏற்றுமதி ரூ. 10,000 கோடியைத் தாண்டிவிடும். இதேரீதியில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், இன்னும் இருஆண்டுகளில் சாப்ட்வேர்-ஹார்ட்வேர் துறையில் நாட்டிலேயே முதல் மாநிலமாகிவிடுவோம்.
இந்த ஆண்டுக்கான சாப்ட்வேர் ஏற்றுமதியில் சென்னையின் பங்கு மட்டும் ரூ. 7,557.64 கோடியாகும். கோவை பகுதியில் இருந்துரூ. 85 கோடியளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் துரிதமாகவே உள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஒரு பெரிய வங்கியும், துபாயைச் சேர்ந்தஒரு எண்ணெய் நிறுவனமும் சென்னையில் புதிய வர்த்தக அலுவலகங்களைத் துவக்கவுள்ளன.
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகம் தொடர்பான அவுட்சோர்சிங்க்கு சென்னையைத் தேர்வு செய்யஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அதிகாரிகளுடன் துபாய் சென்றிருந்தபோது இதற்கான சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்.
கோவையில் ஐடி பார்க்கை உருவாக்க நிலம் வாங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள்கிளைகளை ஆரம்பிக்க விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகியவை அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்றார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications