நாளை 2 நீதிமன்றங்களில் ஜெயேந்திரர் ஆஜர்!!
சென்னை:
| சங்கர மட பக்தர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், சங்கரராமன் கொலைவழக்கில் காவல் நீட்டிப்புக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்திலும் நாளை ஜெயேந்திரர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இரு நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். சங்கரராமன் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்து வரும் ஜெயேந்திரரின் காவல் நாளையுடன் முடிவடைகிறது. |
இதற்கிடையே, சங்கர மட பக்தர் ராதாகிருஷ்ணன் என்பவரின் குடும்பத்தைத் தாக்கிய வழக்கிலும் ஜெயேந்திரர்சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.
அப்போது காவல்துறை தரப்பில் பேசிய வழக்கறிஞர், ஜெயேந்திரர் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்படவுள்ளார். அன்றைய தினமே அவரை இங்கும்ஆஜர்படுத்துகிறோம் என்றார்.
இதையடுத்து விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும்சங்கராச்சாரியார் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் ஜெயேந்திரர் ஆஜர்படுத்ப்படவுள்ளதால் நாளைய தினம் மிகப் பரபரப்பானதானஇருக்கும்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications