இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்ததுக்கு எதிர்ப்பு
டெல்லி:
இந்தியா- -இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா டெல்லி வந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம்செய்து கொள்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்தை சீரமைத்துக் கொடுக்கவும்,இலங்கையின் போர்க் கப்பல்களை பழுதுநீக்கித் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டது.
வைகோ எதிர்ப்பு:
இதை மதிமுக பொதுச் செயலாளர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்.
அப்போது மன்மோகன் சிங்கிடம், யாழ்ப்பாணத் தமிழர்களை ஒடுக்க இலங்கை ராணுவம் பலாலி விமானத் தளத்தைத்தான்பயன்படுத்தியது. அதை இந்தியா சீரமைத்துக் கொடுப்பது இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மீண்டும் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சண்டை ஏற்பட்டால், பலாலி விமான தளத்தை தமிழர்கள் மீது தாக்குல்நடத்த இலங்கை ராணுவம் பயன்படுத்தும். எனவே இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.
கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்ப்பு:
இந் நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் -இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதேபிரச்சினையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், தேசியச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் எழுப்பினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்ற அக் கூட்டத்தில் பேசிய தமிழரான ராஜா,இலங்கையுடன் ராணுவ உடன்படிக்கை செய்வது நல்லதல்ல. பலாலி விமான தளத்தை சீரமைத்துக் கொடுப்பது யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு பாதகமாக அமையும். அது தமிழ்நாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நார்வே தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் வேளையில் இந்தியா சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்என்று வலியுறுத்தினார் ராஜா.
அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த உடன்படிக்கை விவாத நிலையில்தான் உள்ளது. இறுதி முடிவு ஏதும்எடுக்கப்படவில்லை என்றார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், வைகோ ஏற்கெனவே இப் பிரச்சினை குறித்து எனது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார் என்றார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications