வாஷிங்டன் இந்திய தூதரகம் முன் தர்ணா நடத்த திட்டம்
வாஷிங்டன்:
சங்கராச்சாரியாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள இந்து, ஜெயின் மதக் கோவில்கள்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனென் சென்னிடம் அந்த அமைப்பு மனு அளித்துள்ளது. இதே போன்றமனுக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்,நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:
சங்கராச்சாரியாரைக் கைது செய்த விதமும், அவர் நடத்தப்படும் விதமும் எரிச்சலூட்டும் விதத்தில் உள்ளது. அவரை உடனடியாகவிடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களாகிய நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.
இந்தக் கைதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் அடுத்த வாரத்தில் அமைதியாக போராட்டமும்நடத்தப்படும். சங்கராச்சாரியாரை உடனடியாக விடுவித்து, பாதிக்கப்பட்ட மடத்தின் செயல்பாடுகளை மீண்டும் சீர்செய்யவேண்டும்.
சங்கரராமன் கொலை குறித்து நேர்மையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக்குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications