ஜெயேந்திரர்: பிரதமருக்கு ஜெயலலிதா பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கராச்சாரியாரை மிக மரியாதையாகவே நடத்தி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்அனுப்பியுள்ளார்.

சங்கராச்சாரியார் வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும், பலரால் மதிக்கப்படும் அவரது மாண்பும், உடல்நலனும் கெடும்வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் ஜெயலலிதாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்அனுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அனுப்பியுள்ள ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

சங்கராச்சாரியாரின் வயதையும் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு அவரை மிக நல்ல முறையில் தான் நடத்தி வருகிறோம்.மேலும் அவரது சமூக அந்தஸ்து, ஆன்மீகப் பணி ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப மிகமரியாதையுடன் தான் நடத்துகிறோம்.

மருத்துவக் குழுக்களை அமைத்து அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் நலமுடன்இருப்பதாகவே அந்தக் குழு கூறியுள்ளது. இதை சங்கராச்சாரியாரே கூட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது உடல்நலத்தைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

நீங்கள் கூறியுள்ளபடி சட்டம் தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். இதில் தலையிடுவது தவறாகும்.

மிகக் கொடூரமான முறையில் சங்கரராமன் கொல்லப்பட்டார். அந்த வழக்கை மிக ஆழமாக, நேர்மையாக விசாரித்த பின்னர்கிடைத்த ஆதாரங்களை வைத்தே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்.

இதே போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மிக பயங்கரமான கூலிப் படையினரால் தாக்கப்பட்ட வழக்கிலும் முழு விசாரணைக்குப்பின்னரே சங்கராச்சாரியாரின் பெயர் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளை சிறப்பு போலீஸ் படைகள் மிகஜாக்கிரதையாகவே கையாண்டு வருகின்றன.

இவ்வாறு ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜெயேந்திரர்: ஜெயலலிதாவுக்கு பிரதமர் அறிவுரை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+