ஜெயேந்திரர்: ஜெயலலிதாவுக்கு பிரதமர் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகளை பொறுப்புடனும் கண்ணியத்துடனும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிரதமர்மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஜெயேந்திரரின் வயது மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த பொறுப்புடனும், கண்ணியத்துடனும்விசாரணை நடைபெறுவதை முதல்வர் ஜெயலலிதா உறுதி செய்ய வேண்டும்.

வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுக்க நேர்ந்துள்ளதாக அறிகிறேன்.சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் அவரது உடல் நிலையையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஜெயேந்திரருக்கு மதத்திலும் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்து உள்ளது. எனவே அவருடைய பாதுகாப்பும், நலனும் அதிமுக்கியமானவை என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் அக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதில் மத்திய அரசுக்கு பங்கில்லை என்பதை மன்மோகன் சிங் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது விவகாரத்தில் பின்னணி விவகாரங்கள் பலவும் வெளிக் கிளம்பியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்தஅறிவுரையை பிரதமர் வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. வழக்கில் பொறுப்புணர்வுடன் ஜெயலலிதா நடந்து கொள்ளவேண்டும் என்று மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியிருப்பது, இந்தப் பின்னணித் தகவல்களின் அடிப்படையில் தான் என்றுதெரிகிறது

ஜெயேந்திரர்: பிரதமருக்கு ஜெயலலிதா பதில்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+