ஆழியாறு-பரம்பிக்குளம் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை:
ஆழியாறு-பரம்பிக்குளம் நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.
நதிநீர் பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 6ம் தேதிசென்னை வந்தார். அப்போது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 27ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக அமைச்சர்கள் பொன்னையன்,பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறைச்செயலாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேரள அரசின் சார்பில் நிதித் துறை அமைச்சர் வைக்கம் புருஷோத்தமன், நீர்வளத் துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன்மற்றும் தலைமைச் செயலாளர் பாபு ஜேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இந்தப் பேச்சுவார்த்தையில் ஆனமலையாறிலிருந்து 2.5டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அமைச்சர்க்ள் கோரிக்கை வைத்தனர். அதை கேரள அமைச்சர்கள் ஏற்கவில்லை.
மேலும் பல முக்கிய விஷயங்களிலும் நல்ல முடிவு எட்டப்படவில்லை. எனவே வரும் 18ம் தேதி மீண்டும் சந்தித்துப் பேச முடிவுசெய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை குறித்து கேரள அமைச்சர் வைக்கம் புருஷோத்தமன் நிருபர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமானமுறையில் நடந்தாலும் பல முக்கிய விஷயங்களில் தீர்வு ஏற்படவில்லை என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications