அண்ணாமலை பல்கலை. டிச-3ல் திறப்பு
சிதம்பரம்:
போலீசார்- மாணவர்கள் மோதல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரும்டிசம்பர் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 21ம் தேதி வரலாறு காணாத வன்முறை மூண்டது. பல்கலைக்கழகமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பொறியியல் மாணவரான சிவசக்தி என்பவர் இறந்ததால் இந்த வன்முறை மூண்டது.
மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதலில் போலீஸ் தலையிட வாக்குவாதம், வன்முறையாக மாறியது.
ஆத்திரமடைந்த மாணவர்கள் இரவு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து மாணவர்களை போலீசார் சுற்றி வளைத்துத் தாக்கினர்.
இதையடுத்து 22ம் தேதி முதல் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது. இந் நிலையில், டிசம்பர் 3ம் தேதி முதல்பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளும் 3ம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி நடக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications