சுந்தரேச அய்யரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரிடமும், கொல்லப்பட்ட சங்கரராமனின் மனைவி, மகளிடமும்போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடந்து கொண்டுள்ளது. சங்கரமடத்தைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந் நிலையில் மடத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்து கொண்டு போலீசாரை அவ்வப்போது கண்டித்துப் பேசிவரும் சுந்தரேச அய்யரை திடீரென போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்அலுவலகத்திற்கு வரவழைத்தனர்.
தனி அறையில் வைத்து அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார் எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலானடீம்.
இதற்கு முன்பும் சுந்தரேச அய்யரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு முகத்தில் சிரிப்புடன்தான் வெளியே வருவார், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிவிட்டே மடத்திற்குக் கிளம்புவார்.
ஆனால் இம்முறை விசாரணை முடிந்து வெளியே வந்தபோது வெளிறிப் போய் இருந்தார். வியர்க்க விறுவிறுக்கவெளியே வந்த அவரது முகத்தில் வழக்கமான சிரிப்பைக் காணவில்லை.
கையில் வாட்டர் பாட்டிலோடு வெளியே வந்த அவர் வேகமாக மடத்திற்குச் சென்று விட்டார். நிருபர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டபோதும் பதிலே கூறாமல் போய்விட்டார்.
ஜெயேந்திரரும் கோபம்:
சுந்தரேச அய்யர் மீது சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாரும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 2 முறைவேலூர் சிறைக்குச் சென்ற சுந்தரேச அய்யரை அவர் சந்திக்க மறுத்துவிட்டார்.
இதுவரை ஜெயேந்திரர் கோஷ்டியில் இருந்த சுந்தரேச அய்யர், இப்போது விஜயேந்திரர் கோஷ்டிக்குமாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, உறவினர் கண்ணன், சங்கர மடத்தில் ஏட்டாக பணியாற்றிவந்த கண்ணன் ஆகியோரும் எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் பிரேம்குமார் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுவிட்டுத் திருப்பி அனுப்பினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications