ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலாசூர்:
தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக மீண்டும்சோதனையிட்டது. கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்டுள்ள 2வது சோதனையாகும் இது.
ஹீட்-சென்சிங் திறன் கொண்ட இந்த ஏவுகணை விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் 27 கி.மீ. தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கும்திறன் கொண்டது.
முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று நடமாடும் லான்ஞ்சரில் இருந்து ஏவப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் சந்திபூரில் உள்ள ஏவுகணை ஆய்வு மையத்தில் இருந்து காலை 11.57 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
முன்னதாக இந்தியாவே தயாரித்துள்ள விமானியில்லாமல் இயங்கும் விமானமான லக்ஷயா விண்ணில் பறக்க விடப்பட்டது. 4.5 கி.மீ.உயரத்தில் பறந்த இந்த விமானத்தை ஆகாஷ் ஏவுகணை சரியாகத் தாக்கி சிதறடித்தது.
700 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை 60 கிலோ எடையுள்ள குண்டை ஏந்திச் செல்லும் திறன் மிக்கது.
இன்று நடத்தப்பட்ட சோதனை 100 சதவீத வெற்றியடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications