நான் புற்று நோயாளி; ஜெயேந்திரரின் பக்தை--உஷா
காஞ்சிபுரம்:
சங்கராச்சாரியார் தொடர்பு வைத்திருந்ததாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட உஷா ஒரு புற்று நோயாளி என்றுஅவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார் உஷா. அவரை சுதா ராமலிங்கம் மற்றும் அறிவுநிதி ஆகிய வழக்கறிஞர்கள்அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுதா,
குற்றம் சாட்டப்பட்ட உஷா எங்கும் தலைமறைவாகிவிடவில்லை, ஓடிப் போகவில்லை. அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவேஇருக்கிறார்.
உஷாவுக்கு 20 வயதிலிருந்தே பல நோய்கள் வாட்டி வருகின்றன. இப்போது அவருக்கு மார்பக புற்று நோய் உள்ளது. அவரது மருத்துவசிகிச்சைக்காக காஞ்சி மடம் தான் பெருமளவில் நிதி உதவி செய்து வந்தது.
உஷா தப்பியோடிவிட்டார் என்று நேற்று டிவியில் நியூஸ் சொன்னதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார் உஷா. இதனால் தான் இன்றுகாவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்தார்.
இதை சரண்டர் என்று கூட சொல்ல முடியாது. எங்கும் ஓடிப் போகவில்லை என்பதை போலீசிடம் தெரிவிக்க வந்தார். உஷா மீது வேறு எந்தவழக்கும் இல்லை.
உஷாவின மருத்துவ செலவுக்கு உதவி கோரி காஞ்சி மடத்தை அணுகியது அவரது கணவர் நாராயணன் தான். அவர் செய்து வந்தபிஸினஸ் நொடிந்து போனதால் உஷாவை விட்டுவிட்டுப் போய்விட்டார். பலமுறை புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில்இருந்துள்ளார் உஷா.
சிகிச்சைக்கான செலவுகளை காஞ்சி மடமும் உறவினர்களும் தான் வழங்கினார்கள். உஷாவை ஸ்ரீரங்கத்தில் உள்ள வீட்டில் வைத்துபோலீசார் விசாரித்தது உண்மை தான். ஆனால், அதற்கு மேல் உஷாவிடம் விசாரிக்க ஏதுமில்லை என போலீசார்விட்டுவிட்டனர்.
ஆனால், அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர் உஷாவை காலி செய்யச் சொல்லிவிட்டார்.போலீஸ் எல்லாம் வருவது நல்லாயில்லை என்று சொல்லி காலி செய்ய வைத்தார்.
இதனால் தான் ஸ்ரீரங்கம் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கே வந்துவிட்டார். அங்கு தனது உறவினர்களுடன்தங்கியிருக்கிறார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி பெற்ற பெண்ணையும் ஜெயேந்திரரையும் இணைத்து பாலியல் புகார் சொல்வதுஅநாகரீகமாக செயல் என்றார் வழக்கறிஞர் சுதா.
உஷா பேட்டி:
முதலில் நிருபர்களுடன் பேச மறுத்த உஷா பின்னர் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அதில் அவர்கூறியதாவது:
சங்கரராமன் கொலை செய்யப்பட்டதே எனக்குத் தெரியாது. என் உடல் நலக் குறைவால் டிவி பார்ப்பதையும்பேப்பர் படிப்பதையும் கூட விட்டுவிட்டிருந்தேன். இதனால் கொலை நடந்ததே தெரியவில்லை.
சங்கர மடத்தில் இருந்து எனக்கு ஏகப்பட்ட பணம் தரப்பட்டதாக சொல்வதெல்லாம் பெரிய பொய். துபாயில் உள்ளஎனது தோழியில் வீட்டில் சிறிது காலம் ஓய்வெடுக்க அங்கு செல்ல திட்டமிட்டு, பாஸ்போர்ட்டுக்குவிண்ணப்பித்திருந்தேன்.
இதையடுத்து பாஸ்போர்ட் என்கொயரிக்காக ஸ்ரீரங்கம் போலீசார் வீட்டுக்கு வந்து போயினர். நான் துபாய்க்குதப்பியோட எல்லாம் முயலவில்லை.
ஆனால், அதன் பிறகு சங்கரராமன் கொலை தொடர்பாக அடிக்கடி போலீசார் ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்து செல்லஆரம்பித்ததால் அசிங்கமாகிவிட்டது. இதனால் தான் அங்கிருந்து காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்தேன்.
நான் சங்கராச்சாரியாரின் பக்தை. என்னுடன் சங்கராச்சாரியார் டெலிபோனில் பேசியது கூட புற்றுநோயாளியானஎனக்கு ஆறுதல் சொல்வதற்குத் தான் என்றார்.
உஷாவின் அண்ணன் பேட்டி:
உஷாவின் அண்ணன் ஜெகந்நாதன் கூறுகையில், மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல் போகவே ஒருமுறைதற்கொலைக்குக் கூட உஷா முயன்றார். அப்போது தான் சங்கராச்சாரியார் மூலமாக உதவி கிடைத்தது. பணஉதவியோடு மன நிம்மதியும் கிடைத்தது என்றார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications