காஞ்சி காவல் நிலையத்தில் உஷா சரண்
திருச்சி & காஞ்சிபுரம்:
ஜெயேந்திரருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷா என்ற உஷாராணி (வயது 41)காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.
கணவரால் கைவிடப்பட்ட இந்த உஷா, திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளவஞ்சான் தெருவில் உள்ள ஸ்ரீ சக்ராகார்டன் அபார்ட்மெண்ட்சில், வயதான தனது தாயாருடன், பி1 எப்5 என்ற எண் கொண்ட வாடகை பிளாட்டில்வசித்து வந்தார். தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.
இந்த உஷாவுக்கும் ஜெயேந்திரருக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருந்துள்ளன. இவரது குடும்பமே சங்கரமடத்தின் பக்தர்கள் தான். அந்த வகையில் அங்கு சென்று வர ஆரம்பித்த உஷாவுக்கும் ஜெயேந்திரருக்கும்இடையே காமம் பற்றிக் கொண்டுவிட்டது என்று அடுக்குகிறது போலீஸ்.
இதையடுத்து வாரத்தில் 5 நாட்கள் நள்ளிரவு அல்லது அதிகாலையில் தொலைபேசியில் இருவரும்மணிக்கணக்கில் கடலை போட்டுள்ளனர் என்று சொல்லும் போலீசார், இதற்கான டெலிபோன் ஆதாரங்களையும்செல்போன் பில்களையும் காட்டுகிறார்கள்.
உஷா, அடிக்கடி மடத்துக்குப் போய்விட்டு வர ஆரம்பிக்க இதன் பின்னணியில் அசிங்க சமாசாரங்கள் இருப்பதைஅரசல் புரசலாக உணர்ந்த கணவர் நாராயணன் பிரிந்து போய்விட்டதாக சொல்கிறார்கள்.
உஷா அடிப்படையில் சென்னையைச் சேர்ந்தவர் தான். நாராயணுக்குத் திருமணம் செய்து கொண்டு 15வருடத்துக்கு முன் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார். உஷாவுக்கு வயது 41.
கணவர் பிரிந்தவுடன் தனியார் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டார் உஷா. ஆனாலும்வருமானத்துக்கு குறைச்சல் இல்லாமல். வீட்டை ஏர்-கண்டிசன் செய்து, கார் உள்ளிட்ட சகல வசதிகளுடன் வாழ்ந்துவந்துள்ளார். அவருக்கு காஞ்சி மடத்தில் இருந்து பணம் அள்ளிவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் போலீசார்.
கடந்த அக்டோபர் 23ம் தேதியுடன் வீட்டை உஷா காலி செய்து விட்டுச் சென்றதாக அடுக்குமாடிக் குடியிருப்பில்வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் ஜெயேந்திரர் சிக்கியவுடனேயே உஷா இங்கிருந்து மாயமாகிவிட்டார்
ஜெயேந்திரர் கொடுத்த பணம், நகைகளுடன் உஷா தலைமறைவாகி விட்டதாகவும் வெளிநாட்டுக்குத் தப்பியோடிஇருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தன.
இந் நிலையில் இன்று அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடம்சரணடைந்தார்.
மேலும் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர் கைதுக்கு முன்பாகவே போலீஸாரால் உஷாவிசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 13ம் தேதி மதுராந்தகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனபால், உஷாவிடம் விசாரணைநடத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் பெண் போலீஸ் டீமும் வந்து உஷாவை விசாரித்துவிட்டுப் போயிருக்கிறது.
இதையடுத்து 23ம் தேதி உஷா வீட்டைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்கிறார்கள் அக்கம் பக்கத்துபிளாட்வாசிகள்.
பிளாட்டில் உள்ள ரிஜிஸ்ட்ரேசன் புக்கில் டி.என்.-45 வி- 4273 என்ற சரக்கு வேனும், டி.என்.-45, ஏஏ 4024 என்றகாரும் உஷாவின் வீட்டுக்கு வந்துள்ளன. அவற்றில் தான் பொருட்களை அவர் ஏற்றிச் சென்றார் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
உஷாவிடம் வாங்கிய பல விவரங்களை ஜெயேந்திரரிடம் சொல்லி அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துத் தான்அவரிடம் இருந்து கொலை வழக்கில் பல உண்மைகளைக் கறந்திருக்கிறார்கள் போலீசார்.
இந் நிலையில் உஷா தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வர, சென்னையில் வசிக்கும் உஷாவின் சகோதர,சகோதரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மடிப்பாக்கத்தில் உஷா தங்கியிருப்பதாக சந்தேகப்பட்ட போலீசார் நேற்றிரவு அங்கு சென்று சோதனையிட்டபோதுவீடு பூட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் இந் நிலையில் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார் உஷா.
அவரை சுதா ராமலிங்கம் மற்றும் அறிவுநிதி ஆகிய வழக்கறிஞர்கள் அழைத்து வந்தனர்.
சரணடைந்த உஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரைக் கைது செய்ய முடிவு செய்தால், காஞ்சிபுரம் முதன்மைகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது. அதன் பிறகு அவரை முறைப்படி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத்திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications