"காவிகளின் காலித்தனம்"...கி.வீரமணி கடும் தாக்கு
சென்னை:
காம வெறி பிடித்த காவிகளைக் கண்காணிக்க தனி போலீஸ் படையை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சங்கராச்சாரியார் யார் என்பதை இந்த உலகுக்கு வெளிப்படுத்துவதற்காக 1983ம் ஆண்டிலேயே ஒரு ஆதாரக் குவியல் மூலமாகநூல் வெளியிட்டோம். அது ஏதோ எங்களது தவறான ஆவல், அவசரம், ஆர்வம், ஆசையின் காரணமாகக் கொண்டுவரப்பட்டதல்ல.
யதார்த்தமான உண்மை நிலவரத்தையொட்டித்தான் அந்த நூலை திராவிடர் கழகம் வெளியிட்டது.
இப்போது தமிழக அரசின் காவல்துறை காஞ்சி சங்கராச்சாரியாரின் கிரிமினல் நடவடிக்கைகளை சரியான கோணத்தில் சென்றுஆய்வு நடத்தி வருவதால் புதைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நிற்கின்றன.
அரசு வழக்கறிஞராலும், பிரபல பெண் எழுத்தாளர் ஒருவராலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் காதால் கேட்க முடியாதஅளவுக்கு, நாகரீக உணர்வுள்ள யாருமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு உள்ளன.
இன்னும் கூட வெளியே வராத பல தகவல்கள், ஆமை, ஊமையாக்கப்பட்ட எத்தனையோ அனுராதா ரமணன்கள், அபலைகள்,வெட்கத்திற்கு அஞ்சி கூச்சப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் இந்தப் பட்டியலில் இருக்கக் கூடும்.
இதுபோல இப்போதெல்லாம் எங்கெங்கு காணினும் காவிகளின் காமலீலைகள். இந்தக் காவிகளின் காலித்தனத்தை கண்காணிக்கஒரு தனிப் போலீஸ் படையை அமைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
சங்கர மடத்தை மையமாகக் கொண்டு இந்த ஒழுக்கக் கேடுகள் நடந்துள்ளதால், மடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்துஜெயேந்திர சரஸ்வதியை விலகிடச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக அரசின் இந்து அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கி.வீரமணி.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications