சங்கரராமன்: கேஸ் டைரி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை விவரங்கள் முழுவதும் அடங்கிய போலீஸ் கேஸ் டைரி இன்று உயர் நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டது.
சீலிடப்பட்ட கவரில் இந்த டைரி இன்று நீதிபதி பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சங்கராச்சாரியாரின் ஜாமீன்மனுவை விசாரித்த நீதிபதி, கேஸ் டைரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அத்தோடு மனு மீதான தீர்ப்பையும் தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் இன்று கேஸ் டைரியை அரசுத் தரப்பு நீதிபதியிடம் ஒப்படைக்க, ஜெயேந்தரரின் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் இன்றுநீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு சிறப்பு மனு கொடுத்தார்.அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றை மேற்கோள் காட்டி ஜாமீன் மனு மீதுமீண்டும் வாதாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞரின் இந்த சிறப்புக் கோரிக்கையை நீதிபதிஏற்றார்.
இதையடுத்து வழக்கறிஞர் சுப்ரமணியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சிலவற்றை மேற்கோள் காட்டி வாதிட்டார். ஜாமீன் மனுக்கள் மீதானவிசாரணையின்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 437, 439 ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் தெவித்துள்ளது.
இதில் எங்களுக்கு சில குழப்பங்கள் உள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க அரசின் கூடுதல் வழக்கறிஞர் அபுடு குமார் நாளை வரை கால அவகாசம் கேட்டார். இதையடுத்துவிசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
437வது பிரிவில், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தில் ஈடுபட்டுக் கைதானவர்களுக்கு ஜாமீன்அளிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 439வது பிரிவு ஜாமீன் வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
439வது பிரிவை சுட்டிக் காட்டி ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஜாமீன் கோரிய போது, நான் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பால் கைகள்கட்டப்பட்டிருக்கிறேன் என்றார் நீதிபதி.
இந் நிலையில் இந்தப் பிரிவுகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளது ஜெயேந்திரர் தரப்பு. இதற்கான விளக்கத்தை நாளை அரசுத் தரப்புநீதிமன்றத்திடம் சமர்பிக்கும். இதன் பின்னர் தனது தீர்ப்பை நீதிபதி வழங்குவார்.
ஆடிட்டர்: 3ம் தேதி தீர்ப்பு
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதானவிசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல்செய்துள்ளார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications