தொண்டர்களை தேடும் காங்கிரஸ்!
சென்னை:
மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்மிகப் பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தீவிரப் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநிலம்முழுவதும் 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை வெறும் 50,000 உறுப்பினர்களையே இதுவரை திரட்ட முடிந்துள்ளது.இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் காங்கிரசாரின் குடும்ப உறுப்பினர்கள் தான். வெளியாட்கள் அந்தக் கட்சியில் சேர ஆர்வம்காட்டவில்லை.
தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த நிலவரத்தை கட்சியின் மேலிடப் பார்வையாளர் அகிலேஷ் தாஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது 50லட்சம் நிர்ணயம் செய்து விட்டு வெறும் 50,000 பேரை மட்டுமே சேர்க்க முடிந்ததா என்று அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த 50,000 பேரும் தலா 25 சாதாரண உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துள்ளதாகவும், அதன்படி மொத்தம் 12.5 லட்சம் புதியஉறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளதாகவும் அகிலேஷ் தாசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் கூறினர்.
உறுப்பினர் சேர்க்கை ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறது என்ற அகிலேஷ் தாஸின் கேள்விக்கு சில தலைவர்கள் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வந்ததால் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொள்ள முடியவில்லை. மேலும்தீபாவளி, ரம்ஜான் என பண்டிகைகளும் தொடர்ந்து வந்ததால் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட முடியவில்லை என்றும்நொண்டிச்சாக்கு கூறப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தும் கூட உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க முடியாமல் போனது குறித்து காங்கிரஸ்தலைமையிடம் அகிலேஷ் தாஸ் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸார் இடையே நிலவும் கோஷ்டிப் பூசல் தான் இதற்குக் காரணம் என்றும் கடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இவர் நம்மளை சொல்றாரே.. இவர் எத்தனை பேரை கட்சியில சேர்த்தாராம்... அகிலேஷ் அந்தப் பக்கம் போனவுடன் ஒரு கதர்ச் சட்டைசொன்னது!!
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications