மாணவி யுவஸ்ரீ சாவில் மர்மம்: தாயார் புகார்
காஞ்சீபுரம்:
காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் நடத்தப்படும் மாணவியர் விடுதியில் தங்கியிருந்து படித்த பள்ளி மாணவி யுவஸ்ரீயின் மர்ம மரணம்குறித்த விசாரணை நடத்தக் கோரி அந்த மாணவியின் தாயார் போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையனூரைச் சேர்ந்த மாணவி யுவஸ்ரீ காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள, மடத்தின் சார்பில் நடத்தப்படும்காமகோடி மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
5ம் வகுப்பு படித்து வந்த இச் சிறுமி கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம்போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு கொட்டாவி விடப் போய்விட்டனர்.
இந் நிலையில் இப்போது யுவஸ்ஸ்ரீயின் தாயார் நளினி, சகோதரர் சேதுராமன் ஆகியோர் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாரை சந்தித்துதங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை மாதம் 9ம் தேதியன்று திடீரென எங்களைக் கூப்பிட்டு அனுப்பிய சங்கர மட நிர்வாகிகள், எங்களிடம் யுவஸ்ரீயின் பிணத்தைத்தந்தனர். நாங்கள் கதறினோம். இது எப்படி நடந்தது என்று கேட்டபோது சரியான பதில் சொல்லவில்லை. மடத்துடன் மோதும் சக்திஎங்களுக்கு இல்லை, இதனால் உடலை வாங்கிக் கொண்டு போய்விட்டோம் என்று அந்தக் கோரிக்கை மனுவில் நளினி கூறியுள்ளார்.
யுவஸ்ஸ்ரீ சாவுக்கும், சங்கர மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த மாணவியின் சாவில் ரகு கும்பல், அவருடன் தொடர்புடையே லோக்கல் ரெளடிகள் ஆகியோர் மீது ஏற்கனவே சந்தேகம் இருந்துவருகிறது. இது பாலியல்ரீதியில் நடந்த கொலையோ என்ற சந்தேகமும் உள்ளது.
இதே போல காமகோடி மடம் சார்பில் நடத்தப்படும் வேத பாடசாலையில் படித்த 3 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்தவழக்கை விசாரிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications