மன வேதனையுடன் எடுத்த முடிவு: ஜெ மனம் திறப்பு
டெல்லி:
மிகுந்த மன வேதனையுடன்தான் ஜெயேந்திரரைக் கைது செய்யும் முடிவை எடுத்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா அங்கு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழக திட்டஒதுக்கீடு குறித்து விவாதித்தார்.
பின்னர் சென்னை திரும்பும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஜெயேந்திரர் கைது குறித்து முதல் முறையாக வெளிப்படையாகக்கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு ஜெயலலிதா நிதானமான பதிலளிக்கையில்,
எனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில் நான் மிக வேதனையுடன் எடுத்த முடிவுகளுள் இதுவும் ஒன்று.
இது திட்டமிடப்பட்டதோ அல்லது எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல. இதை நான் செய்ய வேண்டும் என்று விரும்பியதும் இல்லை.
ஆனால் சூழ்நிலைகளால், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று பலமாக நம்பியதாலும், இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டியநிலைக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கடமையிலிருந்து தப்பிக்க நான் விரும்பவில்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கும், ஜெயேந்திரருக்கும் இடையே ஏற்பட்ட பகையைத் தீர்க்கத்தான் அவரைக் கைது செய்ய நான்உத்தரவிட்டதாக சில கட்சிகள் பிரசாரம் செய்வது கண்டனத்துக்குரியது, கேலிக்குரியது.
எனது அரசு தனது கடமையை மட்டுமே செய்தது, செய்து வருகிறது.
யாருடைய தூண்டுதலின் பேரிலும், யாரையும் திருப்திப்படுத்தும் விதத்திலும் இந்த நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. இதை எதிர்த்து,விமர்சித்து நடத்தப்படும் பிரசாரம் மக்களை திசை திருப்ப நடத்தப்படும் போராட்டங்களே.
அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்தக் கைது நடவடிக்கையினால் எனது அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. எனது கடமையைத்தான் நான் செய்தேன்.
கைது தொடர்பாக பாஜக, விஎச்பி ஆகியவற்றுக்கு தவறான தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்என்றார் ஜெயலலிதா.
முன்னதாக ஜெயலலிதாவைக் கண்டித்து திட்டக் கமிஷன் அலுவலகம் முன்பு விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச்சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications