எங்கேயோ இடிக்கிறதே...!!
சென்னை:
சங்கரராமன் கொலை செய்யப்பட்டு 2 மாதங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி செய்துள்ளதைப்பார்க்கும்போது எங்கேயோ இடிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ள கருணாநிதி இன்று திமுகநாளிதழான முரசொலியில் எழுதியிருப்பதாவது:
சங்கரராமன் கொலை செய்யப்பட்டு 2 மாதங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் தமிழக அரசு கொடுத்துள்ளது. இதைப்பார்க்கும்போது எங்கேயோ இடிக்கிறது.
இது போன்ற விஷயங்களை எல்லாம் வைத்துத்தான் ஜெயேந்திரர் விவகாரத்தில் தமிழக அரசு உள் நோக்கத்துடன் நடக்கிறதோ என்றஐயப்பாட்டைக் கிளப்பினேன்.
சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரைஅவர்களுக்கு மீண்டும் வேலை தருவது குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளாமலேயே உள்ளது.
சாலைப் பணியாளர்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களில் கழகப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இப்படிப் போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு கேளாக் காதுடன் மெளனமாக இருந்து வந்தால், கூட்டணிக் கட்சிகளைத் திரட்டிமாபெரும் போராட்டம் நடத்தவும் திமுக தயாராக உள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications