தமிழகத்திற்கு ரூ. 9,100 கோடி ஒதுக்கீடு
டெல்லி:
தமிழகத்திற்கு 2005-06ம் ஆண்டுக்கான மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு ரூ. 9,100 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 1,100 அதிகமாகும்.
2005-06ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுடன் முதல்வர்ஜெயலலிதா நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
அப்போது தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 9,100 கோடியை ஒதுக்க திட்டக் கமிஷன் முன் வந்தது. இந்த நிதி ஒதுக்கீடு குறித்துமுதல்வர் ஜெயலலிதா திருப்தி தெரிவித்துள்ளார்.
அலுவாலியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழகம் கோரிய நிதியை திட்டக் கமிஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை நான் மனம் உவந்து வரவேற்கிறேன். தமிழகத்தில் தொழில்வளர்ச்சி உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு பெரும் உதவியாக இருக்கும்என்றார்.
தமிழகத்தில் மின்சாரம் மற்றும் சாலை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கு மட்டும்மொத்தம் ரூ. 2,868.046 கோடி அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத் துறைக்கு ரூ. 1,362.38 கோடியும், சாலை வசதிகளுக்கு ரூ. 1,505.66 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இவை தவிர கல்வி, சுகாதாரம் மற்றும் சத்துணவு ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 3,687.64 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
விவசாயத் திட்டங்களுக்காக ரூ. 641.11 கோடியும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அலுவாலியாவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் குறிப்பாக சென்னை நாட்டிலேயே மிகமுக்கிய இடத்தை வகித்து வரும்போதும் அதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு எதையும் செய்வதில்லை என்றுமுதல்வர் குற்றம் சாட்டினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் தமிழகத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் அத்துறையின் மேம்பாட்டுக்காகதனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அலுவாலியாவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் உலகத் தரத்திலான சர்வதேச விமான நிலையமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேம்படுத்தவும் மத்திய அரசின்அனுமதியும், நிதியுதவிடும் வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இக் கூட்டம் முடிந்த பின்னர் இரவிலேயே ஜெயலலிதா சென்னை திரும்பிவிட்டார். பிரதமர் உள்பட வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications