வேலூர் சிறையில் வி.எச்.பி தலைவருக்கு நோ-எண்ட்ரி
வேலூர்:
ஜெயேந்திரரை சந்திக்க வந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கு சிறைக் காவலர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால்அவர் ஆவேசமடைந்தார்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இன்று வேலூர் வந்தார். ஜெயேந்திரரைப் பார்க்க சிறை நிர்வாகத்திடம் அவர் அனுமதிகோனார். ஆனால் அவரை உள்ளே அனுப்ப சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.
இதனால் ஆவேசமடைந்த சிங்கால், சிறை வாசலிலேயே சூடம் ஏற்று சாமி கும்பிட்டார். பின்னர் அரசுக்கு எதிராகவும், சிறை நிர்வாகத்திற்குஎதிராகவும் அவரும், அவருடன் வந்த தொண்டர்களும் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கால், முதலில் ஜெயேந்திரரை சந்திக்க எனக்கு அனுமதி தந்துவிட்டு இப்போது உள்ளே விடமறுக்கிறார்கள்.
இந்தக் கைதின் பின்னணியில் சோனியா காந்தி உள்ளார். அவரது உத்தரவின் பேரில்தான் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைது சதியால் நிகழ்ந்தது. சர்வதேச அளவில் இதற்குப் பின்னணி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாளை சாய்பாபாவுக்கும் பிறஇந்து மதத் தலைவர்களுக்கும் இதே கதிதான் நடக்கும். அதை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்றார் சிங்கால்.
இது குறித்து வேலூர் சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சங்கராச்சாரியாரை நேற்று சந்திக்கத் தான் அனுமதி கேட்டார் சிங்கால்.அனுமதியும் தரப்பட்டது. ஆனால், நேற்று வராமல் இன்று வந்து சந்திக்க வேண்டும் என்றால் எப்படி அனுமதிக்க முடியும் என்றனர்.
விஎச்பி தரப்பில் கேட்டபோது, ஆமாம், பிளேன் வர கொஞ்சம் லேட்டாகிப் போச்சு. அதான் நேத்து வரலை, இன்னிக்கி வந்தோம் என்றனர்.
சிறையில் ஜெயேந்திரரை சந்திக்க இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன், வி.எச்.பி. அகில உலக துணைத் தலைவர் பிரவீண்தொகாடியா ஆகியோருக்கும் முன்பு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புகள் தான் கைது நடவடிக்கைக்கு எதிராகதமிழக அரசை மிக வன்மையாக கண்டித்து வருகின்றன.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications