சென்னை: அவசரமாய் இறங்கிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வியன்னாவில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பேறந்து கொண்டிருந்த ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை சென்னைவிமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது.
இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜினில் திடீர் கோளாறுஏற்பட்டது.
இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார் பைலட். உடனடியாக அனுமதிதரப்பட்டபோது, எமெர்ஜென்சி லேண்டிங்குக்கான அவசரகால நிலைக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் தயாரானது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. பத்திரமாகத் தரையிறங்கிய பின்னரே விமான நிலைய அதிகாரிகள்நிம்மதியடைந்தனர். இதையடுத்து அதிலிருந்த பயணிகள் 300 பேரும் இறக்கப்பட்டு ஓய்வறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications