சதுர்வேதியின் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திய வழக்கில் கைதாகியுள்ள சென்னை சாமியார் சதுர்வேதியின் ஜாமீன் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சதுர்வேதி சாமியார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந் நிலையில் ஜாமீன்கோரி உயர்நீதிமன்றத்தில் சதுர்வேதி மனு தாக்கல் செய்தார்.
மனு இன்று நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஜாமீன் கோருவதற்கு எந்த முகாந்திரமும்இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக சதுர்வேதியின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுவைத் தள்ளுபடி செய்வதாகநீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications