நாடாளுமன்றத்தில் பாரதியாரின் படம்: இன்று திறப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மகாகவிர பாரதியான் முழு உருவப் படம் இன்று நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்படுகிறது.
தேசியக் கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் படம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
இதேபோல, பிரபல கவிஞர்களான சரத் சந்திர போஸ், திதிப் குமார் செளத்ரி, வாசுதேவ் பல்வந்த் பாத்கே ஆகியோரின் முழு உருவப்படங்களும் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படங்களை இன்று துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். இதை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
பாரதியாரின் படத்தை ஸ்ரீதரன் என்பவர் தீட்டியுள்ளார். இதை டெல்லி செளராஷ்டிர சபை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications