ஜெயேந்திரர் மீது துவாரகை சங்கராச்சாரியார் தாக்கு
Subscribe to Oneindia Tamil
வாரணாசி:
கொலை வழக்கில் சிக்கி கைதாகி சிறைக்குச் சென்றபோதே தனது பீடாதிபதி பதவியை ஜெயேந்திரர் துறந்திருக்க வேண்டும் என்றுதுவாரகை சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
துவாரகை சங்கராச்சாயார் சொரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சன்னியாசி எப்படிஇருக்க வேண்டுமோ அப்படி இருக்கவில்லை ஜெயேந்திரர். கொலை வழக்கிலும், பெண் தொடர்பிலும் சிக்கி அவரது பெயர் சந்தி சிரித்துவருகிறது.
கைதாகி சிறைக்கு சென்றவுடனேயே அவர் தனது பீடாதிபதி பதவியை துறந்திருக்க வேண்டும்.
ஆனால் இன்னும் அந்தப் பதவியை தன்னுடன் வைத்துள்ளார். அவரது பதவியைப் பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவற்புறுத்துகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications