ஜெயலட்சுமி: அமைச்சர்களுக்கு சிபிஐ குறி?
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இந்த விவகாரத்தில் அடுத்ததாக சில தமிழக அமைச்சர்கள் பக்கம் திரும்பும் என்றுதெரிகிறது.
ஜெயலட்சுமி விவகாரத்தை விசாரித்து முடிக்க சிபிஐக்கு இரண்டு மாத கால அவகாசம் தந்தது மதுரை உயர் நீதிமன்றக் கிளை. ஆனால்விசாரணை இன்னும் முடியாத நிலையில் இடைக்கால அறிக்கையையும், விசாரணைக் காலத்தை நீட்டிக்கக் கோரி ஒரு மனுவையும் சிபிஐதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஜெயலட்சுமி, அவரது குடும்பத்தினர் மற்றும் 100 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பானபெரும்பாலான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.அதற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்து.
சிபிஐயின் இந்த மனுவுக்கு தமிழக போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந் நிலையி" ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரிக்கும் சிபிஐ அடுத்ததாக, ஜெயலட்சுமியால் குற்றம்சுமத்தப்பட்ட அமைச்சர்களிடமும் விசாரணையை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன் ஆகியோரது பெயர்களை ஜெயலட்சுமி தனது பத்திரிக்கைப்பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். இவர்களோடு தனக்கிருந்த தொடர்பு குறித்து சிபிஐ விசாரணையின்போது ஜெயலட்சுமி ஆதாரங்களுடன்விளக்கியதாகக் கூறப்படுகிறது.
அதோடு மேலும் சில அமைச்சர்கள் பற்றியும் கூறியதாகத் தெரிகிறது. எனவே இவர்கள் அனைவரிடமும் சிபிஐ விசாரிக்கும் என்றுதெரிகிறது.
ஜெயலட்சுமி வழக்கு தீவிரமானபோது, மேற்கூறிய 3 அமைச்சர்களின் உதவியாளர்களையும் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications