கேசவனின் சகோதரரிடம் தமிழக போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

நீலேஸ்வரம் (கேரளா):

Jayendrarகேரளத்தைச் சேர்ந்த மாணவரான கேசவன் நம்பூதிரி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது பெற்றோரிடம் தமிழக சிறப்புப்போலீஸ் படை நேரில் விசாரணை நடத்தியது.

காஞ்சி சந்திரசேகர கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்று வந்த கேசவன், 1985ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இறந்து போனார். அப்போதுஅவருக்கு வயது 21. மின்சாரம் தாக்கி கேசவன் இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு காஞ்சி மடம் தகவல் தந்தது.

இதையடுத்து அவரது உடலையும் அனுப்பி வைத்தனர். அப்போது அவரது ஆணுறுப்பில் ரத்தம் கசிந்திருந்தது, அதைச் சுற்றி துணியும்கட்டப்பட்டிருந்தது. இது குறித்துக் கேட்டபோது, சங்கர மடத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து உடலை எரித்துவிட்டது அந்தக் குடும்பத்தினர். இதன் பின்னர் சில மாதங்களில் கேசவனின் நண்பனின் உடல் ரயிலில்அடிபட்ட நிலையில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. கேசவனின் மரணம் குறித்த பின்னணித் தகவல் தெரிந்ததால் அவரது கதைமுடிக்கப்பட்டதாகப் பேசப்பட்டது.

ஆனாலும் மடத்துக்கு எதிராக கேசவனின் குடும்பத்தினரோ, நண்பரின் குடும்பத்தினரோ இதுவரை வாய் திறக்காமல் தான் இருந்துவந்தனர்.

இப்போது சங்கராச்சாரியார் மீது அடுக்கடுக்காய் புகார்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன் முதல்வர்ஜெயலலிதாவுக்கு கேசவனின் குடும்பத்தினர் ஒரு பேக்ஸ் செய்தி அனுப்பினர்.

அதில் கேசவன் மரணம் குறித்த சந்தேகங்களைக் கிளப்பியிருந்தனர்.

இதையடுத்து தனிப்படைப் போலீசார் நேற்று கேரளா சென்றனர். காசர்கோட் மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரம் அருகே உள்ள பங்களம்என்ற இடத்தில் வசிக்கும் கேசவனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

முதல்வருக்கு வந்த பேக்ஸ் புகாரின் நகலுடன் வந்த போலீசார், கேசவனின் சகோதரர்களான ஈஸ்வரன் நம்பூதிரி மற்றும் நாராயணன்நம்பூதிரியிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில், கேசவனின் மரணம் குறித்து நாங்கள் எழுப்பிய சந்தேகங்களையும், அந்த மரணத்தின்போது மடம்நடந்து கொண்ட முறை குறித்தும் விளக்கமாக தமிழ்நாடு போலீசார் கேட்டறிந்தனர்.

முதலில் கேசவன் விபத்தில் இறந்துவிட்டதாக 1985ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தந்தி அனுப்பிய சங்கர மடத்தினர் பின்னர் அவன்மின்சாரம் தாக்கி இறந்தாகச் சொல்லி உடைலத் தந்தார்கள் என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள அரக தேவி கோவிலில் பூசாரியாக இருக்கும் நாராயணன் நம்பூதிரி கூறுகையில்,

கேசனின் மரணத்தை வைத்து நஷ்டஈடு வாங்கும் வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை. எங்களுக்கு அந்த மரணத்தின் மர்மங்கள்வெளியில் வர வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள். கேசவன் மின்சாரம் தாக்கி இறந்தாக மடத்தின் நிர்வாகிகள் கூறினார்கள். ஆனால்,அவன் உடலைப் பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறோம், அது மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட சாவே அல்ல என்றார் கலங்கியவிழிகளுடன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+