11 பேருக்கு 3 ஆயுள் தண்டனை
கரூர்:
3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது சூரியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் திருச்சி அருகேஉள்ள புலிவலம் கிராமத்தில் கடந்த 2001ம் ஆண்டு அடையாளம் தெரியாத கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட அண்ணாமலையின் உறவினர்களான சித்தன் என்ற பெரியசாமி, சிதம்பரம், கருப்பண்ணன் ஆகியோர் இது தொடர்பாகசிலரிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந் நிலையில் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மேற்சொன்ன மூன்று பேரும், 11 பேர் கொண்ட கும்பலால் சூரியனூரில் படுகொலைசெய்யப்பட்டனர். குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர்.
கந்தசாமி, சக்திவேல், பழனிச்சாமி, முத்தையன், நாகராஜன், அன்பு, அருணாச்சலம், பனையடியான், ராஜேந்திரன், மேகநாதன், ரங்கன்ஆகிய 11 பேர் மீதும் கரூர் மாவட்ட தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்து.
நீதிபதி ஜி.சொக்கலிங்கம் தனது தீர்ப்பை அறிவித்தார். 11 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி, 11 பேருக்கும் தலா 3 ஆயுள்தண்டனைகளையும், தலா ரூ. 3,000 அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தார்.
அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications