திருச்சி சிறுவன் சாவிலும் மடத்தின் மீது சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Jayendrarதிருச்சியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காஞ்சி சங்கர மடத்தில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிறுவனின் சித்தி சந்தேகம் இப்போதுகிளப்பியுள்ளார்.

திருச்சி அல்லித்துரை பகுதியில் வசித்து வருபவர் சாவித்திரி. இவரது அக்காள் மகன் நாகசுப்ரமணியம். பெற்றோரை இழந்தநாகசுப்ரமணியத்தை அவரது இன்னொரு சித்தியான கெளரி வளர்த்த வந்தார்.

இந் நிலையில் கெளரி இலங்கைசென்றார். செல்வதற்கு முன் நாகசுப்ரமணியதாத்தை காஞ்சி சங்கர மடம் சார்பில் நடத்தப்பட்டு வரும் வேதபாடசாலையில் சேர்த்து விட்டுச் சென்றார்

இந் நிலையில் 1994ம் ஆண்டு வலிப்பு ஏற்பட்டு 15 வயதான நாகசுப்ரமணியன் இறந்து விட்டதாக மடத்தின் சார்பில் சாவித்திரிக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று உடலைப் பெற்றுத் திரும்பினர்.

தற்போது சங்கர மடத்தை மையமாகக் கொண்டு பல மர்ம சாவு புகார்கள் கிளம்பி வருவதால், தங்களது அக்காள் மகனும் கொலைசெய்யப்பட்டிருக்கக் கூடும் என்று சாவித்திரி சந்தேகம் கிளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாரிடம் சாவித்திரியின் கணவர் குணசேகரன் புகார் அளித்துள்ளார். மடத்தில் சுதந்திரமாகசெயல்பட்டு வந்த ரெளடி கோஷ்டியினரின் ஓரினச் சேர்க்கை முயற்சிகளுக்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவன் கதைமுடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+