For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் சுவாஹா: ஸ்ரீகார்யத்திடம் கிடுக்கிப்பிடி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Jayendrarகாமாட்சியம்மன் கோவில் தங்கத் தேர் செய்வதற்காக வந்த தங்கத்தில் 65 கிலோ தங்கம் காணாமல் போனது குறித்து கோவிலின் நிர்வாகி(ஸ்ரீகார்யம்) செல்லப்பாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சங்கராச்சாரியார்கள் கையெழுத்திடுவதில்லை என்பதால், அவர்களது பெயரில் கோப்புக்களில் கையெழுத்துப் போடுபவர் தான் இந்தஸ்ரீகார்யம். இப்போது இந்தப் பதவியில் இருக்கும் செல்லப்பாவைத் தான், சங்கர மடத்தின் சார்பில் வாங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தமிழ்நாடுஹாஸ்பிடலின் நிர்வாகியாகவும் நியமித்தார் ஜெயேந்திரர்.

இதனால் மகா சக்தி பெற்றவர்களுக்கு இந்த செல்லப்பா மீது ஒரு கோபப் பார்வை இருந்து வந்தது.

தங்கம் சுவாஹா:

இந் நிலையில் காஞ்சி சங்கர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு தங்கத் தேர் செய்வதற்காக பக்தர்கள் அளித்த100 கிலோ தங்கத்தில் 35 கிலோ தங்கத்தில் தேர் செய்யப்பட்டுள்ளது. மீதி 65 கிலோ தங்கம் கணக்கில் காட்டப்படவில்லை, அதுஅப்படியே சுவாஹா செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியதும் கூட சங்கரராமன் கொலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை:

இந்தத் தங்கம் குறித்து ஸ்ரீரங்கம் உஷா, குறிஞ்சி சாமியார் எனப்படும் முரளீதரன் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர். இந் நிலையில் தங்கள் குறித்து ஸ்ரீகாரியம் செல்லப்பாவிடமும் போலீசார் விசாரித்துள்ளனர்.

காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காணாமல் போன தங்கம் எங்கே, தேர் செய்வதற்கானசெலவு எவ்வளவு, யார் யார் பணம் கொடுத்தார்கள், யார் யார் தங்கம் கொடுத்தார்கள் என்பது குறித்து செல்லப்பாவிடம் துருவித் துருவிபோலீஸார் விசாரணை நடத்தினர்.

செல்லப்பா பேட்டி:

விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கரராமன் ஏற்கனவே கூறியிருந்த புகார்கள்குறித்து கேட்டார்கள். போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ள கோவில் ஆவணங்கள் குறித்தும் விசாரித்தார்கள்.

தேர் செய்வதில் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறான தகவல் என்று அவர்களிடம் தெரிவித்தேன். மகாப் பெரியவன்கனகாபிஷேகத்திற்கு 85 கிலோ தங்கம் வந்தது. அதில் கோவிலுக்கு தங்க விமானம், தங்க கோபுரம், தங்க கலசம், தங்க சிம்மம் ஆகியவைசெய்யப்பட்டன.

தங்கத் தேர் 1983ம் ஆண்டே செய்யப்பட்டு விட்டது. தங்கம் வந்ததற்கான அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன என்றார்செல்லப்பா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X