டெல்லியில் வைத்து அப்புவிடம் விசாரணை?
சென்னை:
கூலிப் படைத் தலைவன் அப்பு கைது செய்யப்பட்டது தொடர்பாக பலத்த ரகசியம் காத்து வருகிறது தமிழக அரசு.இதனால் இந்த விஷயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
அவனை டெல்லியில் வைத்து தமிழக போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
சங்கரராமன் கொலையை நகழ்த்திய கூலிப் படையின் தலைவனான அப்பு தலைமறைவாக இருந்து வந்தான். இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான விமானம் நேற்று காலை ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது.
அதில் காஞ்சிபுரம் எஸ்பி பிரேம்குமார் உள்ளிட்ட போலீஸார் சென்றதாக கூறப்பட்டது. அப்பு ஆந்திராவில்பதுங்கியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழக போலீஸ் அதிகாரிகளின் இந்த திடீர் பயணம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
முற்பகலில் அப்பு சித்தூர் மாவட்டம் புத்தூர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்தன.அப்புவை கூட்டி வரத்தான் விமானத்தில் அதிகாரிகள் விரைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் மேலும் பரபரப்புஅதிகரித்தது.
சிறிது நேரம் கழித்து ரவி சுப்ரமணியமும் டெல்லியில் பிடிபட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. இருவரையும்அழைத்துக் கொண்டு மாலையில் விமானம் சென்னை திரும்பும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி தமிழக அரசின் தனி விமானம் சென்னைக்குத் திரும்பவில்லை. அப்பு குறித்தும் எந்தத்தகவலும் இல்லை. இதனால் குழம்பிப் போன செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் விமான நிலைத்திலேயேநள்ளிரவு வரை காத்திருந்தனர்.
அப்பு, ரவிசுப்ரமணியம் கைது குறித்த தகவல்களை காவல்துறையினர் உறுதிப்படுத்த மறுத்து வருகின்றனர்.
புத்தூர் காவல் நிலையத்திலும் அப்பு பிடிபட்டது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே, அப்பு டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்து அவனிடம் விசாரணை நடந்துவருவதாகவும் கடைசியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி சுப்ரமணியமும் டெல்லியிலேயே வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பின்னர் இருவரையும் இன்று காவல்துறை சென்னைக்கு கொண்டு வரலாம் என்றும் தெரிகிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications