வாஜ்பாய், அத்வானிக்கு எதிராக சிங்கால் போராட்டம்
ஜெய்ப்பூர்:
ஜெயேந்திரர் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இரட்டை வேடம் போடுவதாக கூறி, அவர்களைக்கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் ஜெய்ப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து ஜெய்ப்பூரில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிங்கால்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மீது சிங்கால் கடுமையாக குற்றம் சாட்டினார்.
அவர் பேசுகையில், பாஜக தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே இந்து மதத்தையும், இந்துக்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் இந்துக்களின் நலனைக் காக்க அவர்கள் விரும்புவதில்லை.
பாஜக தலைவர்கள் குறிப்பாக வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா சுவராஜ், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் சுயநலவாதிகள். அவர்கள்உடனடியாக கட்சியை விட்டு விலக வேண்டும். இந்துக்களின் நலனில் அக்கறை கொண்டதலைவர்கள் பதவிக்கு வர வழி விட வேண்டும்.
சங்கராச்சாரியார் கைது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முழு வீச்சில் எழுப்ப பாஜக தவறி விட்டது. இது ஒரு இறுதியான போர்.இந்துக்களா, இல்லை மற்ற மதத்தினரா என்பதை நாம் பார்க்காமல் விடக் கூடாது என்றார் சிங்கால் மிகவும் ஆவேசமாக.
போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications