ஜெயேந்திரர் ஜாமீன் மனு: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
ஜெயேந்திரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் சார்பில் தாக்கலாகியுள்ள 2 ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயேந்திரர்.அதேபோல, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தநிலையில், ஜெயேந்திரரின் வழக்கறிஞர் சுப்ரமணியம் சில சட்டப் பிரிவுகளுக்கு விளக்கம் கோரியிருந்தார்.
இதையடுத்து இன்று அதற்கு விளக்கம் அளிப்பதாகவும், இந்த விளக்கம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி இன்றுவாதாடுவார் என்றும் அரசுத் தரப்பு கூறியது. இதையடுத்து இன்றைக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும்விசாரணை நடந்தது.
அப்போது ஜெயேந்திரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பிரமணியம், சங்கரராமன் ஒன்றும் கொடூரமான முறையில்கொல்லப்படவில்லை. அவரை யாரும் ஏகே-47 வைத்து சுட்டுக் கொல்லவில்லை.
சங்கராச்சாரியார் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியை எல்லாம் கலைக்க மாட்டார், அவர் கைதாகி 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.எனவே அவரை ஜாமீனில் விட வேண்டும் என்றார்.
இதை மறுத்துப் பேசிய போலீஸ் தரப்பு வழக்கறிஞர் துல்சி, சங்கரராமன் பட்டப் பகலில், கோவிலில் வைத்து சரமாரியாக வெட்டி, மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும்போதே சாட்சிகளை பல்டி அடிக்க வைக்கிறது ஜெயேந்திரர் தரப்பு.அவரை ஜாமீனில் வெளியில் விட்டால் சாட்சிகளை நிச்சயம் கலைப்பார் என்றார்.
பல நேரங்களில் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகக் காட்டமான விவாதம் நடந்தது. மேலும் நீண்ட நேரம் இந்தவிவாதங்கள் தொடர்ந்தன.
பரபரப்பான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தீர்ப்பை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்தஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி இன்று வரை ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில்செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையே இன்னும் நடக்கவில்லை.
அரசுத் தரப்பின் கோரிக்கை காரணமாக இந்த ஜாமீன் மனு மீது வழக்கில் இதுவரை வழக்கறிஞர்கள் வாதமே நடைபெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications