புலிகளின் உயிர் தியாகம்: பாரதிராஜா பாராட்டு
கொழும்பு:
தமிழ் ஈழம் அமைவதற்காக விடுதலைப் புலிகள் செய்த உயிர்த் தியாகம் போற்றத்தக்கது என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
இலங்கை ராணுவத்தினருடனான சண்டையில் இறந்த 17,800 புலிகளின் நினைவைப் போற்றும் விதமாக யாழ்ப்பாணத்தில் மாவீரர் நிகழ்ச்சிநடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு பாரதிராஜா பேட்டியளித்தார். அந்தப்பேட்டியை புலிகள் ஆதரவு இணைய தளம் வெளியிட்டுள்ளது.
பேட்டியில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:
நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனது பிறந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வில் இருந்தேன். போரினால் ஏற்பட்ட இழப்புகளைநேரில் பார்க்கும்போது மனதில் மிகுந்த பாரம் உண்டானது.
இத்தகைய இழப்புகள்தான் இந்த மண்ணில் வீரத்தை விதைத்துள்ளது எனக் கருதுகிறேன். மாவீரர்கள் தினத்தில் கலந்து கொண்டது குறித்தபெருமைப்படுகிறேன்.
புலிகளின் உயிர்த் தியாகம் போற்றத்தக்தக்கது. கடந்த 30 ஆண்டுகளாக தங்களது கொள்கைளை அடைய எவ்வளவு தீரத்துடன் புலிகள்போராடினார்களோ, அதேபோல் தொடர்ந்து போராடினால் தமிழ் ஈழத்தை அடைவது உறுதி.
தமிழக மக்கள் அரும் சாதனைகளையும், மகத்தான வளர்ச்சிகளையும் கண்டுள்ளனர். ஆனால் அவற்றை ஈழத் தமிழர்களின் சாதனைகளுடன்சிறியதாகி விடும். உலகத்தின் எந்த மூலைக்கும் சென்று, சாதனை படைத்த தமிழர்களை சந்தித்தால் அவர்கள் இலங்கை தமிழர்களாகஇருப்பதைக் காண முடியும்.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுடன் நான் உறவாடியபோது, ஒவ்வொருவர் மனதிலும் சொல்வதற்கு ஏராளமான சோகக் கதைகள் இருந்தன.
மாவீரர் தினத்தில் நான் கலந்து கொண்டது என் மனதை உருக்கி விட்டது. போரில் உயிரிழந்த மாவீரர்களின் கல்லறைகளைக்காணும்போது, எனது முதுகுத் தண்டு சிலிர்த்துவிட்டது என்று கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications