டிசம் 6 போராட்டம்: 1000 தமுமுகவினர் கைது
சென்னை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு நாளையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஆயிரக்கணக்கான தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களான சென்டிரல், எழும்பூர் ஆகியவற்றில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோல நகரின் முக்கியப் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் மொத்தம் 10,000 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவையில் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபர் மசூதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் ஊர்வலம் மற்றும் கண்டனக் கூட்டம் நடத்த 5 முஸ்லீம் அமைப்புகள் அனுமதிகேட்டன. ஆனால் போலீஸார் அனுமதி தரவில்லை. அதேபோல சில இந்து அமைப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அண்ணா சாலை தலைமைத் தபால் நிலையம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யவும், அண்ணா சாலை தர்காவிலிருந்துஊர்வலமாக செல்லவும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் முடிவு செய்தது.
அதன்படி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி உட்பட 600 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது தலைமையில்ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மெமோரியல் ஹால் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தெளகீத் ஜமாத் அமைப்பினர் 800 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாபர்மசூதி வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்றுகோஷம் எழுப்பினர். வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினர்.
அதேபோல் கோவையில் இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 1,000 தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர். கோவைபேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெளகீத் ஜமாத் அமைப்பினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி திருநெல்வேலி , சேலம் , ஈரோடு, கடலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஆயிரக்கணக்கான தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மாநிலம் முழுவதும் லட்சத்திற்கும் அதிகமான போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications