போலீஸை திகைக்க வைக்கும் சதுர்வேதி
சென்னை:
சதுர்வேதி சாமியாருக்கு மேலும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதைபோலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆசிரமம் அமைக்க வீடு கொடுத்த சென்னை தொழிலதிபரின் மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளைக் கடத்திச் சென்று பாலியல்கொடுமை செய்ததாக கூறி சதுர்வேதி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் சதுர்வேதி சாமியாருக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டதில் அவருக்குச் சொந்தமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில் இப்போது அந்த சொத்து பட்டியல் லிஸ்ட் மேலும் நீண்டு கொண்டே போகிறது.
கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்ற இடத்தில் சாமியாருக்குச் சொந்தமாக 7,140 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒருமாளிகையும் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க செல்வராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் படை மேல்கோட்டைசென்றுள்ளது.
இதேபோல ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள அகோபிலத்தில் 38 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டுள்ளார் சதுர்வேதி. இதுகுறித்துவிசாரிக்கவும் ஒரு தனிப்படை அகோபிலம் விரைந்துள்ளது.
காஞ்சிபுரம் சன்னதி தெருவில் ரூ. 13.50 லட்சம் மதிப்புள்ள வீடு இந்த சாமியார் பெயரில் உள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 6,540 சதுர அடி பரப்பளவில் நிலம், அதில் வீடு ஒன்றும் சதுர்வேதி பெயரில் உள்ளது.
அதே நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள நாங்கூர் என்ற கிராமத்தில் 40 சென்ட் நிலமும் சாமியார் பெயரில் உள்ளது.
அதுமட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் நிலம் உள்ளது. இதுகுறித்துபண்பாளன் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு அங்கு சென்றுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் 8.50 ஏக்கர் நிலமும், அதே ரோட்டில் கொஞ்சம் தள்ளி 16.50 ஏக்கர் நிலம்வாங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நிலத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கோவில் கட்ட சதுர்வேதி திட்டமிட்டிருந்தார். அதற்காக ரூ. 2 லட்சம்முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாமியாரின் இந்த சொத்துப் பட்டியல் போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications