இலங்கை போராளிகள் சென்னையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற இலங்கை போராளி அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் இலங்கைப் போராளிகள் சிலர் தங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தாங்கள் இலங்கையிலிருந்து வந்திருப்பதாகவும், ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும்தெரிவித்துள்ளனர். எந்தவித உள்நோக்கத்துடனும் சென்னை வரவில்லை. அங்கு போர் அபாயம் இருப்பதால்தான் சென்னைக்கு வந்ததாகதெரிவித்தனர்.
பின்னர் 5 பேரையும் போலீஸார் கைது செய்து புழல் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பமுடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications