மத கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி: கருணாநிதி
சென்னை:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டிவிட உமா பாரதி மூலமாக சங் பரிவார்அமைப்புகளும் பாஜகவும் முயல்வதாக திமுக தலைவர் கருணாநதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு சோனியா காந்திதான் காரணம் என்றும்,அவரது மெளனத்திற்குப் பின்னால் பெரும் சதி ஒளிந்திருப்பதாகவும் ஜெயேந்திரரை சிறையில் சந்திக்க வந்தஉமாபாரதி கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் கைதுக்கு நான்தான் காரணம் என்று ஜெயலலிதா டெல்லி வரை சென்று சொன்னதையும்,சட்டசபையில் சங்கநாதம் முழங்கியதையும் உமா பாரதி ஒதுக்கித் தள்ளி விட்டார். ஜெயலலிதாவின் கூற்றையேபுறந்தள்ளி விட்டு சோனியா மீது பாய்ச்சல் நடத்துவது ஏன்?
ஜெயலலிதாவை பாஜகவினர் விமர்சிக்காமல் விலகி இருப்பது ஏன்?
ஜெயேந்திரரை மரியாதையாக நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கே ஜெயலலிதாவுக்கு கடிதம்எழுதியுள்ளார். இதைவிட எதை சோனியாவிடம் இருந்து எதிர்பார்க்கிறார் உமா பாரதி?
ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் என்ற வகையிலும், பாஜகவில் முன்னேறிய வர்க்கத்தினர் மட்டுமேஅடைய அனுமதிக்கப்படுகிற உயரத்தை எட்டிப் பிடித்த பெண் என்ற வகையிலும் உமா பாரதி மீது எனக்குஎப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் உண்டு.
இதனால் தான் உமாவின் உளறல்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று பொறுமை காத்தேன். ஆனால், வேலூர்சிறை வாசலில் நின்று கொண்டு அவர் பேசியுள்ள பேச்சு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காகத் தானே தவிர வேறுஎதற்கும் அல்ல.
ஜெயேந்திரர் கைதுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு விட்டு அதற்கு வேறு வண்ணம் பூச பாஜகவினரும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களும் முயல்கின்றனர். இந்த திசை திருப்பும் வேலையெல்லாம் மக்களிடம்எடுபடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
உமா பாரதியின் தமிழக வருகையும் பேச்சும், மதமாச்சரியத்திற்கு நெருப்பூட்டி தங்களது அரசியல் லாபத்திற்குஒளியூட்ட மதவாத சக்திகள் நடத்தும் முயற்சியின் ஒரு பகுதி தான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications