செளதி: யுஎஸ் தூதரக தாக்குதலில் இந்தியர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜெட்டா:

செளதி தலைநகர் ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் ஆந்திர வாலிபர் ஒருவர்பலியாகியுள்ளார். சென்னை மற்றும் கோவாவை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்ததுள்ளனர்.

இந்த விவரங்கள் இப்போது தான் வெளிவருகின்றன.

ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் 5 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தூதரகஊழியர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி. இவரது பெயர் பஷீருதீன் (32). இவருக்குகடந்த ஜூலையில்தான் திருமணம் நடந்தது. பஷீருதீன் கடந்த 3 வருடங்களாக தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது உடல்ஜெட்டாவிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது. இவருக்கு வருகிற 12ம் தேதி பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஷீருதீனின் உடல் அடக்கத்திற்காக அவரது உறவினர்கள் செளதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் சென்னையை சேர்ந்த ரிச்சர்டு சைமன் மற்றும் கோவாவை சேர்ந்த பீட்டரோ அன்டோனியோ ஆகியோரும்காயமடைந்துள்ளனர். சைமனுக்கு தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது உடல் நலம் தேறி வருவதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்கள் யாரும் காயமடையவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+