ஆஸ்திரேலியாவில் குடியேற.. ஒரு அசிங்க நாடகம்
சிட்னி:
கர்ப்பிணி மனைவியை கொலை முயன்ற இந்தியருக்கு ஆஸ்திரேலியா நீதின்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளது.
பல்ஜீந்தரின் மனைவி மம்தா ராணி. 1990ம் ஆண்டில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அதே ஆண்டில்ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். இருவரும் அந் நாட்டு குடியுரிமை பெற்றனர்.
அதன்பின் 1997ல் பல்ஜீந்தரின் தம்பி ராஜீந்தர் குமாரை (35) ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க அவரது குடும்பம் தீர்மானித்தது.இதற்காக ராணி தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு இந்தியா சென்று ராஜீந்தர் குமாரை திருமணம் செய்வது என்றும்அதன்பின் ராஜீந்தருடன் ஆஸ்திரேலியாவுக்கு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராணி இந்தியா சென்று ராஜீந்தர் குமாரைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் 2000ம் ஆண்டில் ஆஸ்திரேலியாதிரும்பினார்.
இங்கு வந்ததும் ராஜீந்தர் குமாருக்கு மனைவியாக இருந்து கொண்டே அவரது அண்ணனும் தனது முதல் கணவருமானபல்ஜீந்தருடன் உறவை புதுப்பித்துக் கொண்டார்.
இதை ராஜீந்தர் எதிர்த்துள்ளார். ஆனாலும் தனது முதல் கணவருடனான உறவை ராணி தொடர்ந்தார்.
இந் நிலையில், கடந்த நவம்பர் 2003ல் தனது முதல் கணவரின் வாரிசை வயிற்றில் சுமந்தபடி இருந்த ராணியை ராஜீந்தர் குமார்கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். இதில் ராணி பிழைத்துக் கொண்டார். இச் சம்பவம் மெல்போர்னில் நடந்தது.
இது தொடர்பாக ராஜீந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த விக்டோரிய மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி டேவிட்ஹார்பர், ராஜீந்தருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதில் குறைந்தது 13 வருடங்களை பரோலில் வெளிவராமல் ராஜீந்தர் சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறுவதற்காக இந்தக் குடும்பத்தினரும் ராணியும் நடத்திய விவாகரத்து நாடகம், தம்பியுடன்திருமணம், மீண்டும் அண்ணனுடன் குடும்பம் நடத்தியது போன்ற செயல்களை நீதிபதி மிகக் கடுமையாகக் கண்டித்தார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications