திமுக கூட்டணியில் தொடர்வோம்: வைகோ
ராசிபுரம்:
தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரத்தினம்செட்டியார் திருமண மண்டபத்தில் மதிமுக கட்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில்கலந்து கொண்டு பேசியதாவது:
என்னை 19 மாதம் சிறையில் அடைத்து கட்சியை ஒழிக்க நினைத்தனர். ஆனால் அந்த எண்ணத்தை தூள் தூளாக்கி கழகத் தோழர்கள்கட்சியைக் கட்டிக் காத்தர்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணியின் வெற்றிக்காக 60 நாட்கள் பிரசாரம் செய்தேன். தேர்தலுக்கு பின் நெல்லையிலிருந்துநடைபயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்சினையை அறிந்து கொண்டோம்.
கடந்த மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வில்லை என்று சிலர் வருத்தப்பட்டார்கள். இப்போது அந்த முடிவு சரியானது என்பதைஉணர்ந்துள்ளனர்.
ஒரு கட்சி செல்வாக்குடன் இருக்கும்போது கட்சியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தோல்வி, துன்பம் ஏற்படுகிறபோது கட்சியைநடத்தவது கஷ்டமாகிவிடும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படி 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற உழைத்தோமோ அதே போல் சட்டமன்ற தேர்தலிலும்கடுமையாக உழைப்போம்.
இப்போது இருக்கும் கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கு தொடரும். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்போம். யாருக்கும்தலைவணங்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications